|
சாதனை வயது 4,768 வருடங்கள் |
|
|
|
Written by v.s.t.j
|
|
உலகில் அதிககாலம் வாழும் உயிரினம் எனும் சாதனை மேதுசெலாஹ் ( Methuselah) மரத்தினை சேரும். இந்த மரம் 4,768 வருடங்கள் உயிர்வாழ்வதாக கணக்கிடப் பட்டுள்ளது. செய்ரா நெவாடா (Sierra Nevada) இன் கிழக்கு பகுதியிலுள்ள வெண்மலையில் இது அமைந்துள்ளது. ஒருவகை பைன் (Bristlecone pines) இன மரமானது மலையின் 10,000 அடி உயரத்தில் இன்று வரை உயிர்வாழ்கின்றது. மேலும் , மலையின் இடுக்குகளில் உயிர்வாழக்கூடிய இந்த பையின் மரங்கள் மிகவும் வளற்சி வேகம் குறைந்தவை (நூறு வருடங்களுக்கு ஒரு அங்குல வளற்சி) எனவும் அனைத்து காலநிலை மாற்றங்களுக்கும் ஈடுகொடுக்கவல்லன எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பைன் மரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட 4,768 வருட சாதனை வயது கின்னஸ் சாதனையாகவும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. மேலுள்ள படத்தில் 4,768 வருடங்கள் மேலாக உயிர்வாழும் மரத்தினையும் கீழ் உள்ள படத்தில் மரத்தின் வளற்சிக்காலம் படங்களில்னூடு விளக்கப்பட்டுள்ளது.( படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கலாம்.) 
உலகின் மிக பழைமையான மரம் பற்றிய வீடியோ காட்சி.
|
|
Last Updated on Monday, 31 May 2010 16:07 |