பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling) PDF E-mail
User Rating: / 1
PoorBest 
Written by Eelanation   

220px-Usaf.f15.f16.kc135.750pixவிமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில், விமானங்களின் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கொள்ளளவு பிரதான காரணியாகும். போர் விமானங்களைப் பொறுத்தமட்டில் நீண்ட நேரப் போர் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையாக எரிகொருள் கொள்ளளவும் ஒரு காரணியாகும். பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகையானது விமானங்களுக்கு அவை பறந்துகொண்டிருக்கும்போது எரிபொருள் தாங்கி விமானத்தின்மூலம் எரிபொருளினை நிரப்புதலாகும். இச்செயற்பாடு விமானம் மேலும் தொடர்ந்து பறப்பதற்கு வழிசெய்கின்றது.

போர்விமானங்கள் பெருமளவான போராயுதங்களைக் காவிச்செல்வதன் பொருட்டு ஆரம்ப மேலெழும் நிறையை சமன் செய்வதற்காக தொடக்கத்தில் குறைந்தளவு எரிபொருளையே எர்பொருட்தாங்கியில் நிரப்புகின்றது. இதன்காரணமாக தொடர்ச்சியான போர்நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை இன்றியமையாததாகின்றது. இருப்பினும் அனைத்து வகையான விமானங்களுக்கும் பறப்புநேர எரிபொருள் மீள் நிரப்புகை செய்ய முடியாது. விமானம் பறப்புநேர மீள்நிரப்புகை செய்யக்கூடிய வகையில் பறப்புநேர மீள்நிரப்புகை முனையினைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

பறப்புநிலைஎரிபொருள் மீள்நிரப்புகைக்கான ஆரம்பகட்டப் பரிசோதனை 1920 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்டது. விமானம் ஒன்றிலிருந்து இன்னொரு விமானத்திற்கு பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை செயற்பாடு முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு ஜுன் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1929 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானப் படையைச்சேர்ந்த விமானத் தொகுதி ஒன்று பறப்புநேர மீள்நிரப்புகை மேற்கொண்டு 150 மணிநேரம் தொடர்ச்சியான பறப்பை மேற்கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 1930 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையின் இன்னொரு விமானத் தொகுதி 553 மணி 40 நிமிடங்கள் பறந்து புதிய சாதனை படைத்தது.

தொடர்ந்து 1940 இல் போயிங் விமான நிறுவனம் அமெரிக்க விமானப் படைக்காக எரிபொருள் மீள்நிரப்பும் விமானத்தினைத் தயாரித்தளித்தது. இவ்விமானம் அதனது பின்புறத்தில் எரிபொருள் வழங்கும் குழாயினைக் கொண்டிருக்கும். இக்குழாய் விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பப்படவேண்டிய விமானத்தை நோக்கி நீண்டு செல்லக்கூடியது. எரிபொருள் தாங்கி விமானத்திக் எரிபொருட் கட்டுப்பாட்டறையிலிருந்து எரிபொருள் நிரப்புனர் குாயினைக் கட்டுப்படுத்தி நகர்த்தி எரிபொருள் நிரப்பப்பட வேண்டிய விமானத்தின் பறப்பு நேர எரிபொருள் நிரப்பு முனையில் பொருத்தி எரிபொருளினை நிரப்ப முடியும்.

220px-Helicopter_aerial_refuelingஇவ்வாறு பறப்பு நேரத்தில் எரிபொருள் மீள்நிரப்பும் செயற்பாடானது, விமானங்களைத் தொடர்ச்சியாகப் பறப்பதற்கு வழிவகை செய்கின்ற போதிலும், விமான வடிவமைப்பு மற்றும் மீள்நிரப்பும் எரிபொருட் தாங்கி விமானத்தின் வடிவமைப்பு என்பன சிக்கல் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி விமானிகள் மற்றும் எரிபொருள் நிரப்புனர் ஆகியோருக்கான சிறப்புப் பயிற்சிகள் பெரும் செலவுடையவை. எரிபொருள் மீள்நிரப்பும் இச்செயற்பாடு மிகவும் துல்லியமாகவும் அவதானமாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

உலங்கு வானூர்திகளும் இவ்வாறு பற்ப்பு நேர எரிபொருள் மீள்நிரப்புகை செய்யவல்லன. இதற்கென உலங்கு வானூர்திகளில் சிறப்பாக எரிபொருள் நிரப்பும் முனை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறான முனைகளைக் கொண்ட உலங்கு வானூர்திகளுக்கு சாதாரண விமானங்களைப் போன்று பறப்பு நேரங்களில் எரிபொருள் மீள்நிரப்புகை செய்ய முடியும்.

நன்றி:ஈழநேசன் இணையதளம்

Last Updated on Friday, 10 December 2010 20:18
 


...

Powered By relatedArticle

.....
விண்வெளிப் போர் (Space War)
10 December 2010, 19.04 Eelanation கட்டுரை
விண்வெளிப் போர் (Space War)
தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ................
மிதக்கும் நகரம் (Floating City)
10 December 2010, 19.00 Eelanation கட்டுரை
மிதக்கும் நகரம் (Floating City)
மனித குலம் தோன்றியதிலிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள் அழிவுகள் என்பவற்றைச்................
பாரிய கப்பல்கள்
10 December 2010, 18.56 Eelanation கட்டுரை
பாரிய கப்பல்கள்
கடந்த இரு பகுதிகளிலும், பாரிய விமானங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்திருந்தோம்.................
பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)
விமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில்,................
விண்வெளி வீரருக்கான உணவுகள்
10 December 2010, 18.53 Eelanation கட்டுரை
விண்வெளி வீரருக்கான உணவுகள்
1960 களிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப்புவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்ட................
கறுப்பு விளக்கு/மின்குமிழ் (Black Light)
பொதுவாக விளக்குகள் அல்லது மின்குமிழ்கள் இருளினைப் போக்குவதற்கே ................
"பனாமா கால்வாய்"
29 October 2010, 18.06 v.s.t.j கட்டுரை
  அகில உலகில் அற்புத கட்டுமானம் "பனாமா கால்வாய்". உலகின் ஏழு பழம்பெரும் ................
ஆகாய விமானங்கள்
21 June 2010, 20.07 Eelanation கட்டுரை
ஆகாய விமானங்கள்
ஆகாய விமானம் பறவைகளைப்போன்று தானும் பறந்துவிடவேண்டும் என்று கற்பனைகளிலும் ................
விமானங்கள் - IV
21 June 2010, 19.55 Eelanation கட்டுரை
விமானங்கள் - IV
ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle) மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது................
விமானங்கள் - III
21 June 2010, 19.47 Eelanation கட்டுரை
விமானங்கள் - III
B-52 குண்டுவீச்சு விமானம் குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை................
விமானங்கள் - II
13 June 2010, 20.10 Eelanation கட்டுரை
விமானங்கள் - II
Antonov An-225 விமானம் Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex விமான உற்பத்தி................
விமானங்கள் - I
13 June 2010, 19.29 Eelanation கட்டுரை
விமானங்கள் - I
ஒலிகுறைந்த விமானங்கள் விமானப் போக்குவரத்து தொடங்கிய ஆரம்ப காலங்களில், ................
இணையதளம் - சாபமாய் மாறுமா வரம்?
இணைய தளம் இன்றைய வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. எதைக்குறித்தும்................
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
10 June 2010, 20.25 v.s.t.j கட்டுரை
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம................
புன்னகை என்ன விலை?
10 June 2010, 20.22 v.s.t.j கட்டுரை
புன்னகை என்ன விலை?
பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை................
EZ உந்துகணை விமானம்
10 June 2010, 19.30 v.s.t.j கட்டுரை
EZ உந்துகணை விமானம்
விண்வெளிப் பயணங்கள் மனிதனுக்குச் சாத்தியமாகிவிட்ட போதிலும், அதற்கான செலவென்பது................
Aeroscraft விண்கப்பல்
10 June 2010, 19.27 Eelanation கட்டுரை
Aeroscraft விண்கப்பல்
மனித குல வரலாற்றிக் தொடக்கத்திலிருந்து, மனிதனின் அறிவியல் தேடல்களுக்கான முயற்சி................
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? கூகிள் ஆட்சென்ஸ்
இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு................
"கூகிள் வரலாறு"
15 June 2009, 10.47 v.s.t.j கட்டுரை
ஒரு பிரபல்யமான "தேடு பொறி" (Search Engine) இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்................
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.