"கூகிள் வரலாறு" PDF E-mail
User Rating: / 160
PoorBest 
Written by v.s.t.j   
Article Index
"கூகிள் வரலாறு"
பங்குச் சந்தை வருகை
சுவீகரிப்பு, கூட்டுக்கள்.
All Pages

Google ஒரு பிரபல்யமான "தேடு பொறி" (Search Engine) இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது.

Google 1996 ம் வருடம் ஜனவரி மாதம் லாரி பேஜ் (Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட் (stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) இன் முடிவில் தோன்றியதாகும்.

ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடையம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணனியின் திரையில்) கொடுப்பதை விட, தமது தேடுகருவியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராச்சிக்கு புனைபெயராக 'பாக்ரப்' (BackRub-பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின் புல இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர்.

இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி "ராங்டெக்ஸ்" (rankdex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை (லாரி பேஜ்-சேர்ஜி பிரின்) நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் (stanford) பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு Google தோன்றவும் அடிகோலினர்.

ஆரம்பத்தில் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைகழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக google.stanford.edu என்ற பெயர் பாவிகப்பட்ட போதிலும் பின்னர் google.com என 1997 ம் வருடம் செப்ரம்பர்15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 ம் வருடம் செப்ரம்பர் 15ம் நாள் Google தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.

1998ம் ஆண்டு செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் car grageல் Google வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். மேலும் , இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக Googol.com என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர் (Googol என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும்). ஆனால் , அது சிலிக்கன் பள்ளத்தாக்கு பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப் பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே , இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "GOOGLE" என்ற புதிய சொல். car grageல் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக்கன்-பள்ளத்தாக்கு (Silicon Valley) இற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் Google இயங்கிய போதிலும் விரைவான வருவாய் , வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003 இல் மாற்றலாயிற்ரு. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி Google Plex எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை Google கொள்முதல் செய்தும் கொண்டது.

Google தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து Google சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும் , இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் (click) விகிதத்திலும் விற்க்கப் படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். ( goto.com என்ற இதன் பெயர் overtrue services வாகவும் , பின்நாளில் Yahoo! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்ரிங்" ஆயிற்று). கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" (Google) என்பது மிக பிரபல்யம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்பேஃர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது.' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி (google search) தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி (PageRank mechanism) காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.


Last Updated on Monday, 31 December 2012 19:34
 
விண்வெளிப் போர் (Space War)
10 December 2010, 19.04 Eelanation கட்டுரை
விண்வெளிப் போர் (Space War)
தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ................
மிதக்கும் நகரம் (Floating City)
10 December 2010, 19.00 Eelanation கட்டுரை
மிதக்கும் நகரம் (Floating City)
மனித குலம் தோன்றியதிலிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள் அழிவுகள் என்பவற்றைச்................
பாரிய கப்பல்கள்
10 December 2010, 18.56 Eelanation கட்டுரை
பாரிய கப்பல்கள்
கடந்த இரு பகுதிகளிலும், பாரிய விமானங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்திருந்தோம்.................
பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)
விமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில்,................
விண்வெளி வீரருக்கான உணவுகள்
10 December 2010, 18.53 Eelanation கட்டுரை
விண்வெளி வீரருக்கான உணவுகள்
1960 களிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப்புவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்ட................
கறுப்பு விளக்கு/மின்குமிழ் (Black Light)
பொதுவாக விளக்குகள் அல்லது மின்குமிழ்கள் இருளினைப் போக்குவதற்கே ................
"பனாமா கால்வாய்"
29 October 2010, 18.06 v.s.t.j கட்டுரை
  அகில உலகில் அற்புத கட்டுமானம் "பனாமா கால்வாய்". உலகின் ஏழு பழம்பெரும் ................
ஆகாய விமானங்கள்
21 June 2010, 20.07 Eelanation கட்டுரை
ஆகாய விமானங்கள்
ஆகாய விமானம் பறவைகளைப்போன்று தானும் பறந்துவிடவேண்டும் என்று கற்பனைகளிலும் ................
விமானங்கள் - IV
21 June 2010, 19.55 Eelanation கட்டுரை
விமானங்கள் - IV
ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle) மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது................
விமானங்கள் - III
21 June 2010, 19.47 Eelanation கட்டுரை
விமானங்கள் - III
B-52 குண்டுவீச்சு விமானம் குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை................
விமானங்கள் - II
13 June 2010, 20.10 Eelanation கட்டுரை
விமானங்கள் - II
Antonov An-225 விமானம் Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex விமான உற்பத்தி................
விமானங்கள் - I
13 June 2010, 19.29 Eelanation கட்டுரை
விமானங்கள் - I
ஒலிகுறைந்த விமானங்கள் விமானப் போக்குவரத்து தொடங்கிய ஆரம்ப காலங்களில், ................
இணையதளம் - சாபமாய் மாறுமா வரம்?
இணைய தளம் இன்றைய வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. எதைக்குறித்தும்................
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
10 June 2010, 20.25 v.s.t.j கட்டுரை
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம................
புன்னகை என்ன விலை?
10 June 2010, 20.22 v.s.t.j கட்டுரை
புன்னகை என்ன விலை?
பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை................
EZ உந்துகணை விமானம்
10 June 2010, 19.30 v.s.t.j கட்டுரை
EZ உந்துகணை விமானம்
விண்வெளிப் பயணங்கள் மனிதனுக்குச் சாத்தியமாகிவிட்ட போதிலும், அதற்கான செலவென்பது................
Aeroscraft விண்கப்பல்
10 June 2010, 19.27 Eelanation கட்டுரை
Aeroscraft விண்கப்பல்
மனித குல வரலாற்றிக் தொடக்கத்திலிருந்து, மனிதனின் அறிவியல் தேடல்களுக்கான முயற்சி................
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? கூகிள் ஆட்சென்ஸ்
இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு................
"கூகிள் வரலாறு"
15 June 2009, 10.47 v.s.t.j கட்டுரை
ஒரு பிரபல்யமான "தேடு பொறி" (Search Engine) இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்................
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.