EZ உந்துகணை விமானம் PDF E-mail
User Rating: / 1
PoorBest 
Written by v.s.t.j   

ez-rocket-3விண்வெளிப் பயணங்கள் மனிதனுக்குச் சாத்தியமாகிவிட்ட போதிலும், அதற்கான செலவென்பது மிகமிக அதிகமானதாகவே காணப்படுகின்றது. அதிகளவில் பணத்தைச் செலவிடவல்ல அரசாங்கங்களாலேயே, விண்ணோடங்களை விண்ணுக்கு அனுப்பும் செயற்பாடுகளை செய்ய முடிகின்றது. இருப்பினும், குறைந்த செலவில் விண்ணோடங்களைத் தயாரிப்பதற்கும் குறைந்த செலவிலே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்குமான ஆராய்ச்சிகளை மனிதன் செய்யாமலில்லை.

இதற்கமைவாக, 2004 ஆம் ஆண்டில், குறைந்த செலவில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவல்ல விண்விமானம் ஒன்று SpaceShipOne என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. விமானம் போன்று தரையிலிருந்து மேலெழவல்ல இந்த விண்விமானம், விண்வெளியில் பயணிக்கவல்ல உந்துகணை (rocket) ஒன்றை புவியிலிருந்து 46000 தொடக்கம் 48000 அடிகள் உயரம் வரை காவிச்சென்று பின் உந்துகளை விண்விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விண்வெளிவினுர்டான மீதிப் பயணத்தைத் தொடரும். தொடர்ந்து அந்த உந்துகணை பயணித்து, மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது பூமியின் வளிமண்டலத்தினுட் பிரவேசித்து ஒரு மிதவைவானூர்தி (glider) போன்று பயணித்து புவியை அடையும்.

இவ்வாறில்லாது, உந்துகணை ஒன்று விமானம்போன்று தரையிலிருந்து மேலெழுந்து விண்வெளிக்குச் சென்று பின் திரும்பவும் விமானம் ஒன்றைப்போன்று தரையிறங்கவல்லதாக EZRocketXPC-0268-01இருக்கவேண்டும் என்ற இலக்கை நோக்காகக் கொண்டு XCOR Aerospace என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதே இந்த EZ உந்துகணை (EZ Rocket) ஆகும். இந்த EZ உந்துகணையானது இன்னமும் பரிசேதனை நிலையிலேயே காணப்படுகின்றது.

2001 இல் முதலாவது பறப்பை மேற்கொண்ட இந்த EZ உந்துகணையானது. Rutan's Aircraft Factory இனாலல தயாரிக்கப்பட்ட canard aircraft என்றழைக்கப்படும் விமானத்தை மீள்வடிவமைப்புச்செய்யப்பட்டே உருவாக்கப்பட்டது. இந்த மீள்வடிவமைப்புச் செய்யப்பட்ட விமானத்தில் உந்துகணை ஒன்றின் செயற்பாட்டுக்குரிய பின்வரும் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

  • விமானத்தின் பின்பகுதியில், சுழலி இயந்திரத்திற்கு மாற்றீடாக திரவ எரிபொருளில் இயங்கும் இரண்டு உந்துகணை இயந்திரங்கள் (ocket engines)
  • அழுத்தப்பட்ட திரவ எரிபொருளை (isopropyl alcohol) நிரப்பவல்ல எரிபொருட் தாங்கி.
  • திரவ ஒட்சிசனுடன் கூடிய இரண்டு தாங்கிகள்.

இந்த EZ உந்துகணையின் ஒவ்வொரு உந்துகணை இயந்திரமும் துலுர் 400 பவுண்ட்ஸ் உந்துவிசையினை (thrust) உற்பத்தி செய்யவல்லன. இந்த இயந்திரங்களின் சுவர்ப்பகுதிகளினூடாக குளிர் நிலையிலுள்ள கிரவ எரிபொருள் பாய்ச்சப்படுவதன் மூலம் இயந்திரத்தின் சுவர்ப்பகுதிகள் குளிர்விக்கப்படுவதுடன் அவை உருகாது தடுக்கப்படுகின்றன. இந்த EZ உந்துகணையானது 3.5 நிமிடங்கள் பறப்பதற்குத் தேவையான எரிபொருளை மாத்திரமே காவிச்செல்லவல்லது.

ez-rocket-4தொடர்ந்து இந்த உந்துகணையின் தொழிற்பாடு பற்றிப் பார்ப்போம். விமானி இயந்திர இயக்கத்தை ஆரம்பித்ததும் உயர் அழுத்தத்திலுள்ள மதுசார (alcohol) எரிபொருள் இயந்திரத்தினுட் செலுத்தப்பட, திரவ ஒட்சிசன் ஆனது பம்பி (pump) ஒன்றின்மூலம் இயந்திரத்தினுட் செலுத்தப்படும். தொடர்ந்து மின்எரிபற்றி (electrical igniter) ஒன்றின் மூலமாக எரிபொருள் எரியூட்டப்பட்டு இயந்திரத்தின் செயற்பாடு தொடக்கி வைக்கப்படும். இயந்திரங்கள் இரண்டினூடாகவும் 800 பவுண்ட்ஸ் உந்துவிசை உருவாக்கப்படும். இவ்விசையின் காரணமாக இந்த EZ உந்துகணைகானது 20 செக்கன்களில் 1650 மீற்றர் தூரம் ஓடுபாதையில் ஓடி தரையிலிருந்து மேலெழும். இந்த EZ உந்துகணையானது சாதாரண விமானங்கள் போன்று மேலெழவோ அல்லது பறக்கவோ வல்லதாகக் காணப்பட்ட போதிலும், பின்வரும் வில விடையங்களில் சாதாரண விமானங்களிலிருந்து மாறுபட்டும் காணப்படுகின்றது.

  • இவ்விமானம் 2 நிமிடங்களில் 195 நொட்ஸ் வேகத்தை எட்டவல்லதாகக் காணப்படுகின்றது. (மிகையொலி வேகத்தாரை விமானங்கள் தவிர்ந்த சாதாரண விமானங்களால் இந்த வேகத்தை எட்ட முடியாது).
  • ஒரு நிமிடத்தில் 10000 அடி உயரத்தை எட்டவல்லது.
  • ஆகக்கூடியது 10000 அடிகள் உயரம்வரை பறக்கவல்லது.
  • பறந்துகொண்டிருக்கும் போது விமானி உந்துகணை இயந்திரத்தை நிறுத்தகோ மீண்டும் மறுபடி இயக்கவோ முடியும்.
  • எரிபொருள் தீர்ந்தபின்னர் இந்த விமானத்தால் மிதவை வானூர்தி போன்று தரையிறங்க முடியும்.

பல சோதனைப் பறப்புக்களை மேற்கொண்டுவிட்ட இந்த EZ உந்துகணை விமானத்தின் சோதனை மற்றும் மேம்படுத்தற் பணிகள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன. இந்தப் பரிசோதனை முயற்சிகளின் இறுதி வெற்றியானது விண்வெளிப் பயண வரலாற்றின் அடுத்த படிக்கல்லாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

 

நன்றி:ஈழநேசன் இணையதளம்

Last Updated on Friday, 30 July 2010 20:16
 


...

Powered By relatedArticle

.....
விண்வெளிப் போர் (Space War)
10 December 2010, 19.04 Eelanation கட்டுரை
விண்வெளிப் போர் (Space War)
தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ................
மிதக்கும் நகரம் (Floating City)
10 December 2010, 19.00 Eelanation கட்டுரை
மிதக்கும் நகரம் (Floating City)
மனித குலம் தோன்றியதிலிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள் அழிவுகள் என்பவற்றைச்................
பாரிய கப்பல்கள்
10 December 2010, 18.56 Eelanation கட்டுரை
பாரிய கப்பல்கள்
கடந்த இரு பகுதிகளிலும், பாரிய விமானங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்திருந்தோம்.................
பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)
விமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில்,................
விண்வெளி வீரருக்கான உணவுகள்
10 December 2010, 18.53 Eelanation கட்டுரை
விண்வெளி வீரருக்கான உணவுகள்
1960 களிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப்புவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்ட................
கறுப்பு விளக்கு/மின்குமிழ் (Black Light)
பொதுவாக விளக்குகள் அல்லது மின்குமிழ்கள் இருளினைப் போக்குவதற்கே ................
"பனாமா கால்வாய்"
29 October 2010, 18.06 v.s.t.j கட்டுரை
  அகில உலகில் அற்புத கட்டுமானம் "பனாமா கால்வாய்". உலகின் ஏழு பழம்பெரும் ................
ஆகாய விமானங்கள்
21 June 2010, 20.07 Eelanation கட்டுரை
ஆகாய விமானங்கள்
ஆகாய விமானம் பறவைகளைப்போன்று தானும் பறந்துவிடவேண்டும் என்று கற்பனைகளிலும் ................
விமானங்கள் - IV
21 June 2010, 19.55 Eelanation கட்டுரை
விமானங்கள் - IV
ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle) மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது................
விமானங்கள் - III
21 June 2010, 19.47 Eelanation கட்டுரை
விமானங்கள் - III
B-52 குண்டுவீச்சு விமானம் குண்டுவீச்சு விமானங்களின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அவை................
விமானங்கள் - II
13 June 2010, 20.10 Eelanation கட்டுரை
விமானங்கள் - II
Antonov An-225 விமானம் Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex விமான உற்பத்தி................
விமானங்கள் - I
13 June 2010, 19.29 Eelanation கட்டுரை
விமானங்கள் - I
ஒலிகுறைந்த விமானங்கள் விமானப் போக்குவரத்து தொடங்கிய ஆரம்ப காலங்களில், ................
இணையதளம் - சாபமாய் மாறுமா வரம்?
இணைய தளம் இன்றைய வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. எதைக்குறித்தும்................
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
10 June 2010, 20.25 v.s.t.j கட்டுரை
புவிசார் நிலைகாண் தொகுதி (GPS)
உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம................
புன்னகை என்ன விலை?
10 June 2010, 20.22 v.s.t.j கட்டுரை
புன்னகை என்ன விலை?
பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை................
EZ உந்துகணை விமானம்
10 June 2010, 19.30 v.s.t.j கட்டுரை
EZ உந்துகணை விமானம்
விண்வெளிப் பயணங்கள் மனிதனுக்குச் சாத்தியமாகிவிட்ட போதிலும், அதற்கான செலவென்பது................
Aeroscraft விண்கப்பல்
10 June 2010, 19.27 Eelanation கட்டுரை
Aeroscraft விண்கப்பல்
மனித குல வரலாற்றிக் தொடக்கத்திலிருந்து, மனிதனின் அறிவியல் தேடல்களுக்கான முயற்சி................
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? கூகிள் ஆட்சென்ஸ்
இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு................
"கூகிள் வரலாறு"
15 June 2009, 10.47 v.s.t.j கட்டுரை
ஒரு பிரபல்யமான "தேடு பொறி" (Search Engine) இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப்................
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.