|
உலக வரலாற்று தின நிகழ்வுகள் இப்பகுதியில் சுருக்கமாக பட்டியலிடப் பட்டுள்ளது. இங்கு நீங்கள் அறிய விரும்பும் வரலாற்று குறிப்பினை திகதி வரிசையில் பார்க்கலாம் , அல்லது வலதுபக்க மூலையில் உள்ள "அருவம்" தேடியின் உதவியுடன் இலகுவாக அறிந்து கொள்ளுங்கள். -அருவம்-
|
|
ஜனவரி 17 |
|
- 1377 - பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
- 1524 - இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.
- 1595 - பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.
- 1648 - இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
- 1773 - கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
- 1819 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
- 1852 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.
- 1893 - ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1899 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
- 1917 - கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
- 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.
- 1945 - சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
- 1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
- 1951 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
- 1961 - கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
- 1991 - வளைகுடாப் போர் ஆரம்பித்தது.
- 1995 - ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
|
|
|
|
Page 185 of 185 |