வரலாறு

உலக வரலாற்று தின நிகழ்வுகள் இப்பகுதியில் சுருக்கமாக பட்டியலிடப் பட்டுள்ளது. இங்கு நீங்கள் அறிய விரும்பும் வரலாற்று குறிப்பினை திகதி வரிசையில் பார்க்கலாம் , அல்லது வலதுபக்க மூலையில் உள்ள "அருவம்" தேடியின் உதவியுடன் இலகுவாக அறிந்து கொள்ளுங்கள்.
-அருவம்
-



ஜூன் 2 PDF
  • 1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர்.
  • 1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1924 - ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
  • 1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.
  • 1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
  • 1965 - வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது.
  • 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
  • 1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்.
  • 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2003 - வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது.
Last Updated on Friday, 12 June 2009 08:41
 
ஜூலை 27 PDF
  • 1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.
  • 1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.
  • 1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
  • 1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
  • 1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1865 - வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் arrive in Argentina at சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.
  • 1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.
  • 1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
  • 1929 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை
  • 1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ-சீனாவைக் கைப்பற்றினர்.
  • 1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
  • 1955 - ஆஸ்திரியாவில் மே 9, 1945 முதல் நிலை கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
  • 1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1983 - வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
  • 1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1990 - திரினிடாட் டொபாகோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
  • 1997 - அல்ஜீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2002 - உக்ரைனின் லுவிவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது போர் விமானம் ஒன்று மக்களின் மீதூ வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.
  • 2007 - பீனிக்ஸ், அரிசோனாவில் இரண்டு ஹெலிகப்டர்கள் வானில் மோதின.
Last Updated on Thursday, 11 June 2009 20:17
 
«StartPrev12345678910NextEnd»

Page 2 of 185
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.