வரலாறு

உலக வரலாற்று தின நிகழ்வுகள் இப்பகுதியில் சுருக்கமாக பட்டியலிடப் பட்டுள்ளது. இங்கு நீங்கள் அறிய விரும்பும் வரலாற்று குறிப்பினை திகதி வரிசையில் பார்க்கலாம் , அல்லது வலதுபக்க மூலையில் உள்ள "அருவம்" தேடியின் உதவியுடன் இலகுவாக அறிந்து கொள்ளுங்கள்.
-அருவம்
-



ஜூன் 17 PDF
  • 1579 - சேர் பிரான்சிஸ் டிறேக் "நோவா அல்பியன்" (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
  • 1631 - முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானாள்.
  • 1839 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
  • 1885 - விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
  • 1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1940 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
  • 1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.
  • 1944 - பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர்.
  • 1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1948 - பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1953 - பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 1987 - மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.
  • 2006 - மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
ஜூன் 14 PDF
  • 1789 - பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
  • 1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
  • 1807 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.
  • 1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.
  • 1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.
  • 1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
  • 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
  • 1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.
  • 1940 - போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
  • 1941 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
  • 1941 - எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
  • 1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
  • 1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
  • 1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
  • 1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.
  • 1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
  • 1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
  • 2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
  • 2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
  • 2007] - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.
 
«StartPrev12345678910NextEnd»

Page 10 of 185
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.