தரவு
பிரபல 30 இணையத்தளங்களும் வருமானங்களும் PDF E-mail
Written by v.s.t.j   

உலகின் பிரபல இணையத்தளங்கள் என பேசப்படுபவை கடந்த 10 வருடங்களில் தமக்குரிய தனியான இடத்தை பெற்றுள்ளது மட்டுமல்ல
வருமானமீட்டுவதிலும் தனியான இடத்தில் இருக்கின்றன. இந்தவகையில் 2009 ம் வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான தகவல் அடிப்படையில் முதல் 30 இடங்களை வகிக்கும் இணையத்தளங்களின் விபரம் அட்டவணையில் காணலாம்.

நிலை இணையத்தளம் நிறுவனர் ஆண்டு வருமானம் ஒரு செக்கனில்
1 Google Larry Page and Sergey Brin $21,800,000,000 $691.27
2 Amazon Jeff Bezos $19,166,000,000 $607.75
3 Yahoo Jerry Yang and David Filo $7,200,000,000 $228.32
4 eBay Pierre Omidyar $6,290,000,000 $199.45
5 MSN/Live Nathan Myhrvold. $3,214,000,000 $101.92
6 PayPal Max Levchin, Peter Thiel, and Luke Nosek, $2,250,000,000 $71.35
7 iTunes Jeff Robbin $1,900,000,000 $60.25
8 Reuters Marshal Vace $1,892,000,000 $59.99
9 Priceline Jesse Fink $1,884,000,000 $59.74
10 Expedia Added Mark Schroeder $1,447,000,000 $45.88
11 NetFlix Reed Hastings $1,200,000,000 $38.05
12 Travelocity Terry Jones $1,100,000,000 $34.88
13 Zappos Nick Swinmurn $1,000,000,000 $31.72
14 Hotels.com David Litman $1,000,000,000 $31.70
15 AOL Erik Prince $968,000,000 $30.71
16 Orbitz Jeff Katz $870,000,000 $27.59
17 Overstock Robert Brazell $834,000,000 $26.45
18 MySpace Tom Anderson $800,000,000 $25.38
19 Skype Niklas Zennstrom $550,841,000 $17.48
20 Sohu Zhang Chaoyang $429,000,000 $13.60
21 Buy.com Robb Brock $400,000,000 $12.68
22 StubHub Eric Baker $400,000,000 $12.68
23 Alibaba Jack Ma $316,000,000 $10.02
24 Facebook Mark Zuckerberg $300,000,000 $9.52
25 YouTube Chad Hurley, Steve Chen and Jawed Karim, $300,000,000 $9.52
26 Blue Nile Mark Vadon $295,000,000 $9.35
27 Tripadvisor Stephen Kaufer $260,000,000 $8.23
28 Getty Images Mark Getty $233,200,000 $7.39
29 Bidz Garry Itkin $207,000,000 $6.56
30 NYTimes Henry Jarvis Raymond $175,000,000 $5.54
Last Updated on Wednesday, 30 December 2009 19:06
 
ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) PDF E-mail
Written by v.s.t.j   

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) 1971 ம் வருடம் டிசம்பர் 2 ம் நாள் அதிகாரபூர்வமாக உதயமாகியது. UAE இன் மொத்த நிலப்பரப்பு 83,600 சதுர கிலோமீற்றர்கள் ஆகவும் 20 சிறு தீவுகளையும் மேலதிகமாக கொண்டுள்ளது. UAE இன் 5 இல் 4 பகுதி பாலைவகமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

UAE ஏழு இராச்சியங்களை உள்ளடக்குகின்றது. இவற்றின் தலை நகராக அபுதாபி (Abudhabi) விளங்குவதுடன் இதுவே மிகப்பெரிய நிலப்பகுதி கொண்டுள்ள இராச்சியமாகும். UAE இன் உத்தியோகபூர்வ மொழியாக அரபிய மொழியும் உத்தியோகபூர்வ மதமாக இஸ்லாமும் இருந்துவருகின்றது.

50 வருடங்களுக்கு முன்பு அடிப்படை வசதிகளான மின்சாரம், தொலைபேசி , நீர்வடிகால் , நீர்வழங்கல் , நெடுஞ்சாலை , ஆழ்கடல் துறைமுகம் , நவீன பாடசாலை , மருத்துவமனைகள் என்பன அமைந்திராத போதிலும் இன்று இவை எல்லாவற்றிற்கும் பெயர் பெற்ற நாடாக UAE விளங்குகின்றது. இன்று உலகின் மிகப்பெரிய உல்லாசபயணிகள் , முதலீட்டாளர் வருகையும் உள்ள இடமாக மாறியுள்ளது.

பல ஆயிரம் வருட பழைமை கொண்ட பழைய UAE நாடானது முத்து , சிப்பி போன்றவற்றிற்கு பிரபல இடமாக பலகாலமாக இருந்துவந்துள்ளது. மிகச்சிறிய சனத்தொகை கொண்டிருந்த பழைய UAE , 1820 ம் வருடம் பிரித்தானிய ஆதிக்கத்தில் உட்பட்டு 1971 ம் விடுதலையின் பின்னதாக எண்ணை அகழ்விற்கும் ஏற்றுமதிக்கும் புகழ்வாய்ந்த நாடாக சர்வதேச மட்டத்தில் நவீன ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) இருந்து வருகின்றது.

பிரித்தானிய ஆட்சியில் ரூசிகல் ( Trucial,Trucial Coast, Trucial Oman or Trucial Sheikdoms )எனவும் தற்போது UAE எனவும் உலகில் பிரபலமாக அழைக்கப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் குறிப்பிடும்படியான தகவல்கள் சுருக்கம் கீழ் தொடர்கின்றது.

  • UAE இல் அங்கம் வகிக்கும் ஏழு அரபு இராச்சியங்கள் வருமாறு: Abu Dhabi, Dubai, Sharjah, Ajman, Umm Al-Qaiwain, Ras AL-Khaimah, Fujairah.
  • 40 அங்கத்தவர்களை கொண்ட தேசிய சமஸ்தி கவுண்சில் (Federal National Council) UAE ஐ ஆட்சிபுரிகின்றது.இந்த கவுண்கிலிற்கு ஒரு ஜனாதிபதியும் இருந்துவருகின்றார்.
  • UAE இன் இரண்டாவது மிகப்பெரிய நாடாக டுபை (Dubai) விளங்குகின்றது .இதன் முக்கிய பொருளாதாரம் எரிபொருள், கட்டுமானம் , உல்லாச பயணத்துறை இவற்றுடன் வங்கி பண கொடுக்கல் வாங்குதல் , துறைமுக வர்த்தகமும் விளங்குகின்றது.தற்போது Dubai இன் மொத்த சனத்தொகை 1.1 மில்லியன் எனவும் இது 4 மில்லியனாக 2017 இலும் , 5 மில்லியனாக 2020 இலும் எதிர்பார்க்கப் படுகின்றது. சவுதி அரபியாவுக்கு அடுத்த நிலையில் அதிக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இருக்கின்றது.[அருவத்தில் காணப்படும் பல தகவல்கள் டுபை சம்பந்தமாக இருப்பதால் அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது.]
  • டுபை தவிர மற்றய இராச்சியங்களின் முதன்மை ஏற்றுமதி பொருட்களாக அலுமினியம் , உணவு பதனிடல் , நெசவுத்தொழில் , பழ உற்பத்தி என்பவற்றுடன் டுபையை ஒத்த பண்பும் காணப்படுகின்றது.
    • UAE இன் அபுதாபியில் 1958 ம் வருடம் முதல் முதலில் எரிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 1959 இல் சர்வதேச விமானநிலையம் UAE இல் நிறுவப்பட்டது.
    • 1968 இல் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி 171,000 மொத்த சனத்தொகையை இன்றய UAE கொண்டிருந்தது.
    • 1971 இல் சுதந்திரம் பெற்ற UAE கூட்டமைப்பு UN இல் இணைக்கப்பட்டது.
    • முதலாவது Emirates விமான சேவை 1985 இல் தொடங்கப்பட்டது.
    • 1999 இல் UAE இன் மொத்த சனத்தொகை 2.8 மில்லியனாக இருந்தது.
    • 2003 இல் அமெரிக்க படைகள் ஈராக் செல்வதை UAE எதிர்த்தது.
    • UAE இல் வசிப்பவர்களில் 80 விகிதமானவர்கள் வெளிநாட்டவராவர்.
    • வெளிநாட்டவர் சொத்துரிமை செய்யவென Free Trade Areas பல UAE அமைக்கப்பட்டுள்ள
    • வருமானவரி, பொருட்கள்வரி அறவே இல்லாத UAE இன் பணமான ADE (Arab Emirates Dirham) அமெரிக்க டொலருடன் நியமமாக வைக்கப்படுகின்றது. அதாவது 1 டொலர் 3.67 அரபு டெரமாக எப்போதும் மதிப்பிடப்படும்.(1$=3.67 AED).
    • அதிகாரபூர்வ தகவல்கள் UAEவசம் 97.8 மில்லியன் பரல் பெற்ரோலிய எண்ணை கையிருப்பில் இருப்பதாக கூறுகின்றன. இத்தொகை உலக கையிருப்பின் 8.5% என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்த வேலை நேரமும் அதிக வருவாயும் தருகின்ற UAE இல் வெள்ளிக் கிழைமை விடுமுறை தினமாகவும் மற்றய வாரவிடுமுறைகளும் அடங்குகின்றது.
ஆண்டு மழைவீழ்ச்சி 6.5 cm ஆகவும் பகல் வெப்பம் 26 பாகை செல்சியஸ் , இரவு வெப்பம் 15 பாகை செல்சியஸ் ஆகவும் சராசரி இருந்துவருகின்றது. பெருமளவு பாலைவன பிரதேசத்தினை கொண்டுள்ள UAE நாட்டின் கரையோரம் எண்ணை கழிவுகளினால் மாசுபட்டும் இருப்பதாக சொல்லப் படுகின்றது. எது எப்படி இருந்த போதிலும் உல்லாச பயணிகளின் "மக்கா" என UAE வர்ணிக்கப் படுகின்றது. சர்வதேசரீதியில் மிகவும் நல்லுறவை பேணிவரும் UAE நாடானது மேற்குலக நாடுகளுடனும் குறிப்பாக அமெரிக்காவுடனும் நல்ல நேச உறவை கொண்டிருப்பது UAE இன் தனியான சிறப்புக்கள்.

Impossible City - Duba (youtube-video)

Dubai Mega Projects (video)

Big Map

Last Updated on Monday, 04 October 2010 09:57
 
மெற்றிக் குறியீடுகள் PDF E-mail
Written by v.s.t.j   

1960 ம் வருடம் சர்வதேசரீதியில் மெற்றிக் அளவீடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. மெற்றிக் அளவுமுறை விஞ்ஞானம் , தொழில்நுட்பம் கையாளும் மிகவும் பெரிய அல்லது மிகவும் சிறிய அளவீடுகளை இலகுவாக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இருந்தபோதிலும் இதன் இலகுமுறை காரணமாக அன்றட உபயோகத்திற்கும் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது. அன்றாட பாவனையில் மெற்றிக் அலகுகள் இருந்தபோதிலும் அவை எல்லாம் மக்களுக்கு பரீட்சியமானதல்ல (உதாரணமாக 10 மீற்றர் என்பது 1 டெகா (deka) மீற்றர் என்பதை பலரும் அன்றாடம் உபயோகிப்பதில்லை.).
மெற்றிக் அளவீடுகளில் மிகவும் பெரிய அல்லது மிகவும் சிறிய அளவீடுகளின் முன் இணைப்பு (prefix) பெயர்கள் ,சர்வதேச குறியீடு , குறியீட்டின் அர்த்தம்  கீழ் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

 

முன் இணைப்பு (prefix) பெயர் சர்வதேச குறியீடு குறியீட்டின் அர்த்தம் முன் இணைப்பு (prefix) பெயர் சர்வதேச குறியீடு குறியீட்டின் அர்த்தம்
Yotta Y 1024 (septillion) yocto y 1/1024
Zetta Z 1021 (sextillion) zepto z 1/1021
exa E 1018 (quintillion) atto a 1/1018
peta P 1015 (quadrillion) femto f 1/1015
tera T 1012 (trillion) pico p 1/1012
giga G 109 (billion ) nano n 1/109
mega M 106 (million ) micro µ 1/106
kilo k 1000 milli m 1/1000
hecto h 100 centi c 1/100
deka da 10 deci d 1/10
(Most conversion factors are from the tables at the U.S. National Institute of Standards and Technology.)
Last Updated on Thursday, 31 December 2009 08:49
 
«StartPrev123NextEnd»

Page 1 of 3
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.