விற்ரமின் PDF E-mail
Written by v.s.t.j   
விற்ரமின் (Vitamin) என்பது கூட்டான இரசாயன கலவை என்பது உங்களுக்கு தெரிந்ததே. உடலில் உள்ள கலங்களின் இயக்கத்திற்கும் வளற்சிக்கும் பெருக்கத்திற்கும் விற்ரமின் அத்தியாவசியமானது. உடலின் முக்கிய இயக்கத்தை சீராக பேனும் 13 விற்ரமின் பெயர்கள் வருமாறு.

* Vitamin A
* Vitamin C
* Vitamin D
* Vitamin E
* Vitamin K
* Vitamin B1 (thiamine)
* Vitamin B2 (riboflavin)
* Vitamin B3 (niacin)
* Pantothenic acid
* Biotin
* Vitamin B6
* Vitamin B12
* Folate (folic acid)
மேலுள்ள 13 விற்ரமின் வகைகள் நீரில் கரைபவை (ஒன்றுடன் மற்றயது சேரும் தன்மை), கொழுப்பில் கரைபவை என இரு பிரிவுகளில் அடங்கும்.

  • நீரில் கரையும் விற்ரமின் வகையில் B, C, B12 அடங்குகின்றது. கொழுப்பில் கரைவனவற்றில் A, D, E, K ம் அடக்கப்படும்.
  • கொழுப்பில் கரைவன உடலின் கொழுப்பு படைகளில் நீண்டகாலம் சேமித்து வைக்கப்படுகின்றது.
  • நீரில் கரையும் வகைகளில் விற்ரமின் B12 மட்டும் பல நாட்களுக்கு ஈரலில் சேமித்து வைக்கப்படும் மீதமாகவுள்ள B, C உடனடியாக உடலினால் பாவிக்கப்பட்டு எஞ்சிய பாகம் சிறுநீருடன் வெளியேற்றப்படும்.
  • மேலும் விற்ரமின் உட்கொள்ளும் போது நீரில் கரைபவை நீருடனும் கொழுப்பில் கரைபவை சிறிதளவு கொழுப்புடனும் சேர்த்து உட்கொள்ளும் போதே நன்கு பலனளிக்கும் என கண்டறியப் பட்டுள்ளது.
குறிப்பு:
மிக அண்மைக்காலம் வரை விற்ரமின் D கல்சிய தாதுப் பொருளை உடல் உறிஞ்ச மட்டுமே உதவுவதாக நம்பப்பட்ட போதிலும் அதன் பங்களிப்பு அதைவிடவும் மிகவும் பெரிய அளவில் இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாக எமது உடலானது சூரிய ஒளிமூலம் உருவாக்கும் இந்த விற்றமின் அற்புத விற்றமின் (D) எனும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது. இந்த அற்புத விற்ரமின் குறைபாட்டினால் பின்வரும் நோய்கள் உடலை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இதையம்-நரம்பு மண்டலங்களில் பாதிப்பு , சக்கரை வியாதி , இரத்த அழுத்தம் , கொலஸ்ரோல் , சிலவகை புற்று நோய், ஆஸ்த்துமா , தோல் வியாதிகள் , எலும்பு தொடர்பான வியாதிகள் என மிக நீண்ட பட்டியல் வெளியகியுள்ளது. ஆகவே இயற்கையில் எமது தோல் தயாரிக்கும் இந்த அற்புத விற்றமினை பெறுவதற்காக சிறிது நேரம் வெய்யிலில் (சூரிய ஒளியில்) தினமும் நில்லுங்கள் , அற்புத பலன் பெறுங்கள்.
Last Updated on Monday, 04 October 2010 10:08
 


...

Powered By relatedArticle

.....
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.