நபர
உலக பங்குச் சந்தையின் நாயகன் PDF Print E-mail
Written by v.s.t.j   
Thursday, 19 November 2009 12:20

உலகின் 2 வது மிகப்பெரிய செல்வந்தரும் அமெரிக்க பங்குச் சந்தையின் பிரபலமுமான வொரன் பபெட் (Warren Buffett) பற்றிய சுவையான தகவல்கள்.

  • உலகின் செல்வந்தர் வரிசையில் பில்கேஸிற்கு அடுத்த நிலையிலுள்ள இவர் 31 பில்லியன் டொலரை பொது தொண்டுகளுக்கு செலவிட முடிவுசெய்துள்ளார். இத் தொகை வொரன் பபெடின் மொத்த சொத்து மதிப்பின் 85% மாகும் என்பதுடன் தனது மரணத்தின் பின்னதாக எஞ்சிய பகுதியையும் பொது சேவையில் செலவிட முடிவு செய்துள்ளார்.
  • வொரன் பபெட் தனது 11 வது வயதில் முதலாவது பங்கினை வேண்டிய போதிலும் , 11 வயதிற்கு முன் ஏன் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் ஆரம்பிக்கவிலை என இப்போதும் அவர் வருத்தப்படுகின்றாராம்.
  • முதல் முதலில் தனது 14 வது வயதில் பத்திரிகை விநியோகம் மூலமாக சம்பாதித்த பணம் மூலமாக சிறிய பண்ணை ஒன்றை தனக்கு சொந்தமாக்கினார்.
  • இன்று 78 வயதாகவுள்ள வொரன் பபெட் 1965 ம் வருடத்தில் நஸ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த நெசவு ஆலையினை கொள்முதல்செய்தார் , அதன் இன்றய மதிப்பு 145 பில்லியன் டொலர்கள்.
  • அரை ஏக்கரிலும் குறைந்த காணியில் அமைந்துள்ள 5 படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டில் (திருமணம் முடிந்ததும் குடிபுகுந்த வீடு) கடந்த 50 வருடமாக வசித்துவரும் வொரன் பபெட் , அந்த வீட்டில் தனக்கு வேண்டியது எதுவம் குறையின்றி இருப்பதாக சொல்கிறார். மேலும் இந்த வீட்டை சுற்றி வர மதில் அல்லது வேலிகளோ இல்லயாம்.
  • தனது காரை தானே செலுத்தும் வொரன் பபெடுட் தனக்காக மெய்க்காவலர் ஒருவரையும் வேலைக்கு அமர்த்தவில்லை.
  • உலகில் மிகப்பெரிய தனியார் விமானசேவை நிறுவனம் வைத்திருக்கும் வொரன் பபெட் , தனது பயணத்திற்கு ஒருபோது தனி விமானம் எதையும் இதுவரை பாவிக்கவில்லை.
  • தற்போது 80 நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான வொரன் பபெட் , தனது நிறுவன கூட்டங்கள் எதிலும் தலையிடாத போதிலும் வருடத்தில் ஒரே ஒரு கடிதம் எழுதி அதில் வருடத்திற்குரிய முழு அறிவுறுத்தல்களையும் குறிப்பிடுகின்றார்.
  • தனது நிறுவனங்களின் மூலமாக (Berkshire Hathaway Inc) வருட வருமானமாக 100,000 டொலர் மட்டும் பெறுகின்றார்.
  • ஒருவருடம் முன்பதாக 75 பில்லியன் டொலர்களாக இருந்த வொரன் பபெட்டின் பங்குசந்தை வர்த்தக தொகை 49.1 பில்லியனாக தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.
  • ஓய்வு வேளையில் ஆடம்பர சமூகம் சார்ந்த கேளிக்கை எதிலும் கலக்காது இருந்துவரும் வொரன் பபெட் , தனக்கு உரிய ஓய்வு வேளையில் தானே தயாரிக்கும் சோள பொரிகளை அசைபோட்ட வண்ணம் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவிடுகின்றார்.
  • வொரன் பபெட் தனமும் 5 கான் செரி கோக் (Cherry Coke) அருந்துவதாகவும் சொல்லப்படுகின்றது.
  • வொரன் பபெட் ஒருபோதும் கைத்தொலைபேசி அல்லது கணனியையும் பாவிப்பதில்லையாம்.
  • ஐந்து வருடம் முன்பதாக பில்கேட்ஸ் (உலகின் 1 ம் செல்வந்தர்) முதல்முதலாக வொரன் பபெடை சந்திக்க திட்டமிட்டு அதற்காக அரை மணி நேரம் செலவு செய்ய முடிவுசெய்தார்.(ஏனெனில் , பில்கேட்ஸ் நினைத்தார் என்னதான் அரைமணி நேரம் மேல் இந்த ஆளுடன் பேச இருக்கப்போகின்றது என குறையாக எடைபோட்டிருந்தார்.) ஆனால் அன்று இருவரும் 10 மணி நேரம் பேசிவிட்டார்கள். அன்றிலிருந்து வொரன் பபெடின் பக்தனாக பில்கேட்ஸ் மாறிவிட்டார். அத்துடன் வொரன் பபெட் தனது பொது பணிகளை பில்கேட்ஸுடன் சேர்ந்து செய்யவும் முடிவுசெய்தார்.
  • தனது 22 வது வயதில் திருமணம் முடித்துத வொரன் பபெடுக்கு 3 பிளைகள் உள்ளனர்.
  • வொரன் பபெட் இளைஞர்களுக்கு ஒரு புத்திமதி சொல்லியுள்ளார். அதாவது , கடன் அட்டைகளை உபயோகிக்காது உங்களை முதலிடுங்கள் என கூறியுள்ளார்.


பில்கேட்ஸ் , வொரன் பபெட் இருவரின் கேள்வி பதில் வீடியோ வடிவில்.

Last Updated on Monday, 31 May 2010 16:10
 
இசை உலகின் ஞானி மொஷாற் PDF Print E-mail
Written by v.s.t.j   
Wednesday, 18 November 2009 18:14

  • இசை உலகின் ஞானி (musical maestro) என பலநூறு வருடமாக போற்றப் படுபவர் "மொஷாற்" (Mozart).
  • இவர் (Wolfgang Amadeus Mozart ) 1756 ம் வருடம் ஜனவரி 27 ம் திகதி ஒஸ்ரியா நாட்டின் Salzburg எனும் இடத்தில் பிறந்தார்.
  • இவருடைய தந்தையார் லியொபொல்ட் மொஷாற் ( Leopold Mozart) தொழில் வயலின் வாத்தியம் , இசையமைப்பது (composer) என்பதுடன் மொஷாறின் ஒட்டுமொத்த குடும்பமும் இசை பின்னணி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த மொஷாற் தனது 5 வது வயதில் முதலாவது மெலோடியஸ் (melodious) இசை குறிப்பை வெளியிட்டார்.
  • மொஷாற் தனது முதலாவது சிம்பொனி இசையை 8 வயதாக இருக்கும் வேளை எழுதிமுடித்தார்.
  • தனது இளமை பருவத்திலேயே பல தனித்துவமானதும் மிகவும் பிரபலமானதுமான 600 இசைக்குறிப்புகளை எழுதிமுடித்தார்.
  • மொஷாறின் அபார சாதனை , ஞானம் இவற்றிற்கு முற்று புள்ளி வைத்தாற்போல் இவரது மரணம் 35 வது வயதில் நிகழ்ந்தது.(பல நூறு வருடமாக மொஷாற் மரணமான மர்மம் நீடித்துவருகின்ற போதிலும் 2000 ம் வருடம் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் காச்சல் காரணமாக வெனவும் , 2009 ம் வருட மருத்துவ ஆராட்சிமூலம் சிறுநீரக பாதிப்பு எனவும் பல முரண்பட்ட அறிக்கைகள் இன்று வரை வந்தவண்ணம் இருப்பது மொஷாற் எனும் தனிமனிதர் பற்றிய முக்கியத்துவத்தினை காட்டவல்லது.)
  • 1791 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் நாள் மொஷாற் இறப்பதற்கு முன்பாக 20 ஒப்ரா (operas), 50-60 சிபொனி (symphony), 30-40 இசை நிகழ்ச்சிகள் ( பியனோ, வயலின்) , மற்றும் பல இசைசாதனை பல புரிந்த உலகின் இசைஞானி இறக்கும் தறுவாயில் மிகவும் வறுமையில் வாடியதாக வரலாறு குறிப்பிடுகின்றது.
  • மரணத்தின் பின்னதாக இன்றுவரை அவரது இசைக்குறிப்புகள் பல மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது மல்லாமல் பல மில்லியன் இசை ரசிகர்கள் மொஷாற் பின்னால் உள்ளது குறிப்பிடத்தக்கது.


குறிப்பு:
மெலோடியஸ் என்பது சீரான இதமான இசை எனவும் இது கேட்பதற்கு மிருதுவாகவும் இருபதுடன் இதன் இசை குறியீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்த தன்மை உள்ளன எனவும் கூறப்படுகின்றது.
சிம்பொனி என்பது ஒரேவகை வாத்தியத்தினை பலர் சேர்ந்து குழுவாகவும் , பல வாத்தியங்களை பல குழு சேரவும் மிக நீண்டதும் , மிகவும் சிக்கில் வாய்ந்ததுமான இசைக்குறிப்புடன் நடாத்தப்படும் ஒரு வகை இசை நிகழ்வு.
ஒப்ரா என்பது இசை பின்னணியுடன் அரங்கத்தில் நடிப்பை வெளிப்படுத்தும் மேடை நிகழ்வு.


புதிய மொஷாற் என புகழப்படும் 6 வயது சிறுமி பற்றிய வீடியோ பதிவு.

Last Updated on Tuesday, 01 December 2009 19:41
 
«StartPrev12NextEnd»

Page 1 of 2
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.