|
Written by v.s.t.j
|
|
ஐக்கிய அரபுராச்சிய ( டுபை -Dubai ) மக்களின் விருந்தோம்பலின் சின்னம் பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் (Burj-Al-Arab Hotel) என வர்ணிக்கப்படுகின்றது. அரபியவளைகுடாவின் பாரம்பரிய கடல் வணிகத்தின் பாய்மர ஓடத்தினை நினைவுகூரும் வண்ணம் இந்த நவீன ஹொட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்துவருட கட்டுமானத்தின் பின்பு 1999 ம் ஆண்டு திறந்து வைகப்பட்ட காலத்தில் இதுவே செயற்கை தீவிலமைந்த உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 650 மில்லியன் டொலர் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அதிநவீன ஆடம்பர ஹொட்டல் தொடர்பிலான குறும் தகவல் கீழ்வருமாறு.
- இதன் உயரம் 333 மீற்றர் (1,090 அடி) , இது ஜெமேரா கடற்கரையில் இருந்து 280 மீற்றர் (920 அடி) தூரத்தில் கடலில் செயற்கையில் அமைந்த தீவில் (கடலில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவில்) அமைக்கப்பட்டுள்ளது.
- ஒருவகை படகு வகை அமைப்பில் இதன் வடிவம் அமைக்கப் பட்டு இதன் 180 மீற்ரர்கள் உயரத்தில் விசாலமான திறந்த வெளியும் வடிவமைக்கப் பட்டுள்ளது. பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் பிரத்தியோக வளை பாலத்தினால் நிலத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
- பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் இன் அடித்தளம் 236 அடி விடமும் 45 மீற்றர் ஆழமும் கொண்ட உருளை வடிவான கட்டிட பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டலின் கட்டுமானத்திற்காக 70,000 கன மீற்றர் சீமெந்து கலவையும் , 9,000 தொன் இரும்பும் பாவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 43,000 சதுர மீற்றர் கண்ணாடி, 13,000சதுர மீற்றர் மார்பிள் (Carrara Marble), 12,000 சதுர மீற்றர் கிறனைற் (Brazilian Granite), 32,000 சதுர மீற்றர் மொசைக் (Italian Mosaic), 15,000 சதுர மீற்றர் தங்க இலை (24 carat gold leaf) என்பனவும் இந்த ஆடம்பர கட்டிடத்தின் தேவைக்காக உபயோகித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
- இந்த ஹொட்டலின் வெளிப்புற பகுதியானது இரவுவேளையில் வர்ண விளக்கு போன்று தோற்றமளிக்கவென விசேட கண்ணாடியினால் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உட்புற மத்தியில் அமைக்கப்பட்டுள்ள "தண்ணீர் பீச்சி" (Water Jet) 16 மாடிகள் உயரத்தினை அடைந்து மீண்டும் நிலத்தில் வந்தடையும் வண்ணம் விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (வீடியோ பார்த்தால் மட்டும் புரியும்!.)
- உலகில் மிக விலை உயர்ந்த ஹொட்டல் அறைகளை ( ஒரு இரவு தங்குதல் 1,000 டொலர் தொடக்கம் 28,000 டொலர் வரை பல ரகம்) கொண்டுள்ளது எனும் பெருமையை கொண்டுள்ளது.
- பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் தன்னகத்தில் மிகச்சிறந்த உணவகம் , உள்ளக நீர்மூழ்கி சவாரி , அதி நவீன கடல்வாழ் உயிரியில் காட்சியகம் (990,000 லீற்றர் நீர் தடாகத்தில்) , மற்றும் ஆடம்பர பெழுதுபோக்கு வசதிகளையும் கொண்டுள்ளது. பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல் (Burj-Al-Arab Hotel) டுபய் நாட்டிலுள்ள விசித்திரமான பல நவீன ஆடம்பர கட்டிடங்களில் ஒன்றாகும
- 250 கட்டிட வடிமைப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட இந்த ஆடம்பர ஹொட்டேலில் 1,200 முழுநேர பணியாளர்கள் வேலைசெய்கின்றனர். மிகவும் புகழுக்குரிய "பேர்ஜ்-அல்-அரப்" உலகின் முதலாவது ஏழு நட்சத்திர ஹொட்டல் எனும் தகுதியைஹொட்டல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலுள்ள தகவல் தொடர்புடைய வீடியோ (youtube) காட்சி
Burj al Arab & Madinat Jumeirah in 360
map
Burj Al Arab
|
|
Last Updated on Thursday, 28 July 2011 18:38 |

தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆச்சரியமான................
|

உலகின் மிகப்பெரியதும் மிகவும் செலவுகூடியதுமான விஞ்ஞான பரிசோதனை LHC (Large Hadron Collider) எனும்................
|

உலகின் சாதனை நிகழ்வுகளை பதிவு செய்யும் அதிகாரபூர்வ ஏடாகிய கின்னஸ் புத்தகம் (Guinness World................
|

மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டின் 2 வது பெரிய நகரமும் 2,500 ஆண்டுகள் பழைமை................
|

பிரஞ்சு நாட்டில் உள்ள ஐபீல் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ம் திகதி திறக்கப்பட்டது. இது................
|

மனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா................
|

உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான HKIA தொடர்பான படங்கள் மேலே உள்ளன. இந்த................
|

வானியல் ஆராட்சியின் புரட்சிகர சாதனம் வானியல் தொலைநோக்கி "ஹபிள்" (Hubble). வளிமண்டல மாசு................
|

பேர்ஜ் கோபுரம் (Burj Tower)
[முக்கிய குறிப்பு: "பேர்ஜ் டுபாய்" தற்போது "பேர்ஜ் கலீஃபா" (Burj................
|

ஐக்கிய அரபுராச்சிய ( டுபை -Dubai ) மக்களின் விருந்தோம்பலின் சின்னம் பேர்ஜ்-அல்-அரப்................
|

"டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்.
முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில்................
|

படத்தில் காணப்படுவது யப்பான் (Japan) நாட்டில் அமைக்கப்பட்டுள்ள "அகாசி கைக்ஜோ" (Akashi Kaikyo)................
|

மனிதனின் தேவைகள் தினம்தினம் அதிகரிக்கும் வேகத்தில் தொழில் நுட்பமும் அதுசார்ந்த................
|

(காட்சி :ஆடம்பர உல்லாச செயற்கை தீவுகளின் ஒருபகுதி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள................
|

1974 ம் வருடம் ஹங்கேரி (Hungary) நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ................
|
 உலகின் அதிசயங்களில் ஒன்றாக பலகாலம் தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டுமானமாக................
|

அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில்................
|
|
|
|